7 முறை சம்மன் அனுப்பியும் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


7 முறை சம்மன் அனுப்பியும் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x

7 முறை சம்மன் அனுப்பியும் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

தஞ்சாவூர்

கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 7 முறை சம்மன் அனுப்பியும் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் நடராஜன். இவர் தற்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு ,இன்ஸ்பெக்டர் நடராஜன் திருவையாறில் பணியாற்றியபோது மருவூர் போலீஸ் நிலையத்திற்கும் பொறுப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது அந்த பகுதியில் காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த மினி லாரியை பிடிக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளரை லாரியை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது.

பிடி வாரண்டு

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பான வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது இந்த வழக்கில் சாட்சி சொல்ல வருமாறு இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற 21-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


Next Story