ஊட்டமலை அரசு பள்ளிக்குள் புகுந்துமாணவனை தாக்கிய தொழிலாளி கைது
தர்மபுரி
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே வகுப்பில் படிக்கும் மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி மாணவ-மாணவியை அழைத்து தனது அறையில் விசாரணை நடத்தினார். அப்போது நாடார் ெகாட்டாயை சேர்ந்த மாணவியின் உறவினர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி ஒகேனக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தாக்கிய தொழிலாளியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story