கெங்கவல்லி அருகேமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது


கெங்கவல்லி அருகேமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
x
சேலம்

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). இவர் மனநல பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். அவர் தற்போது 8 மாதமாக கர்ப்பமாகி உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கூடமலை அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் அண்ணன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து முதியவர் மணியை கைது செய்தனர்.


Next Story