ஓமலூர் அருகே உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது


ஓமலூர் அருகே உடும்பு வேட்டையாடிய 2 பேர் கைது
x
சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டையில் வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனவர்கள் தங்கராஜ், வீரமணி மற்றும் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்ததில் சுமார் 1½ கிலோ எடையுள்ள உடும்பை வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடும்பை பறிமுதல் செய்த வனத்துறையினர் உம்பிலிக்கம்பட்டி இருளர் நகரை சேர்ந்த மணி (வயது 22), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.


Next Story