சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் புகுந்துஅதிகாரிகளுககு கொலை மிரட்டல் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது


சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் புகுந்துஅதிகாரிகளுககு கொலை மிரட்டல் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
x
சேலம்

சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 3 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அரசு அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது. இந்த கூட்டத்துக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அரங்கை விட்டு வெளியே செல்லுமாறு அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வெளியே செல்ல மறுத்ததுடன் அதிகாரிகளை தகாத வார்த்தையால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக டவுன் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் அந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மேச்சேரி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), அவரது தம்பி சக்திவேல் (26) மற்றும் மேட்டுப்பட்டியை சேர்ந்த அருண் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story