கடனை அடைப்பதற்காகபஞ்சு லாரிக்கு தீ வைத்த அண்ணன்-தம்பி கைது


கடனை அடைப்பதற்காகபஞ்சு லாரிக்கு தீ வைத்த அண்ணன்-தம்பி கைது
x
சேலம்

சங்ககிரி

சங்ககிரி அருகே கடனை அடைப்பதற்காக பஞ்சு லாரிக்கு தீ வைத்து விட்டு நாடகமாடிய அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர்.

லாரி தீப்பிடித்தது

சேலம் அருகே காடையாம்பட்டி ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மெய்யரசன் (வயது 27). லாரி உரிமையாளர். இவரது லாரியில் ஓமலூர் ஜாலிகொட்டாய் பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் என்பவர் மராட்டிய மாநிலத்தில் இருந்து பஞ்சு பாரம் ஏற்றி கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் சங்ககிரி அருகே வந்தபோது லாரி திடீரென தீப்பிடித்துஎரிந்தது.

இதுகுறித்து ெமய்யரசன் சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் செல்வராஜ் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகியோர் லாரியில் இருந்த 92 பஞ்சு பேல்களை திருடி சேலம் அருகே ராக்கிபட்டி இடத்தில் இறக்கி வைத்து லாரிக்கு தீவைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வராஜ் மற்றும் பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடனை அடைக்க

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரபு சொந்தமாக லாரி வாங்கி ஓட்டியதும் இதில் கடன் ஏற்பட்டதால் லாரியை விற்று விட்டு டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கடனை அடக்க பிரபு லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரிடம் பஞ்சு பேல் லோடு வருகிறது. ஒரு பகுதி பஞ்சுபேல்லை எடுத்து விற்று கடனை அடைத்துவிடலாம்.

அதை விற்று பணம் கொடுத்தால் உனக்கு ஒரு தொகையை கொடுக்கிறேன் என கூறி உள்ளார். அதன்படி சங்ககிரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் லாரியை நிறுத்தி சூர்யா, செல்வராஜ் ஆகியோர் லாரிக்கு தீவைத்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. சூரியா தலைமறைவு ஆகிவிட்டார் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story