தர்மபுரியில்யு-டியூப்பர் காரில் கடத்தல்12 பேர் கைது


தர்மபுரியில்யு-டியூப்பர் காரில் கடத்தல்12 பேர் கைது
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரியில் யு-டியூப்பரை காரில் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

யு-டியூப்பர் கடத்தல்

தர்மபுரி மாவட்டம் லளிகம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 31). இவர் தர்மபுரியில் யு-டியூப் சேனல் அலுவலகம் நடத்தி வந்தார். இவர் நேற்று அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 11 பேர் ஆனந்தகுமாரின் அலுவலகத்தில் புகுந்து அவரை தாக்கினார்கள்.

பின்னர் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 70 செல்போன்கள், 5 மடிக்கணினிகள் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஆனந்தகுமாரை காரில் கடத்திச் சென்றனர். இதை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

12 பேர் கைது

இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். குண்டல்பட்டி அருகே அந்த காரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து ஆனந்தகுமாரை மீட்டனர். மேலும் செல்போன் மற்றும் மடிக்கணினிகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது முன்விரோதம் காரணமாக ஆனந்தகுமாரை அந்த நபர்கள் கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக தர்மபுரியை சேர்ந்த சின்னசாமி (38), சீராளன் (30), சுந்தரம் (30), ரவி (39), முருகன் (26), சுரேஷ் (39), சதீஷ் (35), பெரியசாமி (27), சந்திரன் (29), தினேஷ்குமார் (23), மணி (25) உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story