கொத்து புரோட்டா கேட்டு ஓட்டல் மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது


கொத்து புரோட்டா கேட்டு ஓட்டல் மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sep 2023 9:00 PM GMT (Updated: 19 Sep 2023 9:01 PM GMT)

வத்தலக்குண்டுவில் கொத்து புரோட்டா கேட்டு ஓட்டல் மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கடந்த 17-ந்தேதி சென்ற 2 பேர் சாப்பிட சென்றனர். அப்போது அங்கிருந்த தேனி ஜெயமங்கலத்தை சேர்ந்த மாஸ்டர் முத்துவிடம் அவர்கள் கொத்து புரோட்டா கேட்டனர். அவர் இல்லை என்றதும் ஆத்திரம் அடைந்த அவர்கள், முத்துவுக்கு குத்து விட்டதோடு சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஓட்டல் மேலாளர் முகமது ஆசிக் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்ததில், மாஸ்டர் முத்துவை தாக்கியது பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் நந்தகுமார் (வயது 27), பாலகிருஷ்ணன் (35) என்று தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story