மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே புழுதிபட்டி சத்திரம் கடை பகுதியில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தாம்பரத்தைச் சேர்ந்த மகிமைராஜ் (வயது 27) முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். மேலும் விசாரணை செய்த போது அந்த மோட்டார் சைக்கிளை திருச்சி லால்குடி பகுதியில் திருடி வந்ததும், மேலும் ஏப்ரல் மாதம் புழுதிபட்டியில் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் போது பெட்ரோல் இல்லாமல் பாதி வழியில் விட்டு சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மகிமை ராஜை போலீசார் கைது செய்து சிங்கம்புணரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Related Tags :
Next Story