விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலைக்கு செல்லும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் கடந்த 22-ந் தேதி கொல்லிமலை கீழ் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் சொத்து தகராறில் கல்லால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் அவருடைய முதல் மனைவி லதாவின் மகன் ராஜ்குமார், உறவினர் தினேஷ் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சேந்தமங்கலம் அருகே உள்ள திருமலைபட்டி பிரிவு சாலையில் நின்று கொண்டிருந்த ராஜ்குமாரின் உறவினரான ஹேம்நாத் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான ஹேம்நாத்துக்கு, யோக பிரியா (21) என்ற மனைவியும், சுஜன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர். இதையடுத்து ஹேம்நாத் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story