பரமத்தி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் முதியவர் கைது
பரமத்தி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் முதியவர் கைது
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. முதியவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பழனியப்பன் (வயது 67) என்பவரது வீட்டில் நேற்று மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கைது
அதில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி, 35 கிலோ துவரம் பருப்பு, 8 பாக்கெட் ரேஷன் பாமாயில் மற்றும் ரேஷன் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட மொபட் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.