அரூரில் சாராய வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி
அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 36). இவர் மீது சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் அண்மையில் சாராயம் காய்ச்சியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது 450 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதையடுத்து குண்டர் சட்டத்தில் குப்புராஜை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தின் கீழ் குப்புராஜை கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அரூர் போலீசார் குப்புராஜை குண்டர் சட்டத்தில் மீண்டும் கைது செய்தனர்.
Next Story