மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கியவர் கைது


மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கியவர் கைது
x

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி தீன் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 43). இவருடைய மனைவி தமிழரசி (39). இவர் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் குமார் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு தமிழரசி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குமார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story