சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது


சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவர் கைது
x

பத்தமடை அருகே சொத்து தகராறில் வாலிபரை கல்லால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை அருகே உள்ள கரிசூழ்ந்தமங்கலம் நடுவூரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சுந்தர் (வயது 24). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் குமார் (42). இவர்கள் இருவரும் உறவினர்கள். இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சுந்தர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார் அவரை அவதூறாக பேசி, கிணற்றுக்குள் தள்ளி கல்லால் தலையில் எரிந்து காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.


Next Story