பணம் எடுத்து தருவதாகக்கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாகக்கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பாரிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி தனது மகன் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக கலவையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அறிமுகம் இல்லாத ஒருவர் நான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.20 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பெருமாள் கலவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி அத்திமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story