நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவா் கைது


நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவா் கைது
x

கிருஷ்ணராயபுரம் அருகே நிலத்தகராறில் விவசாயியை அரிவாள்ளால் வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன். இவர் விவசாயம் செய்து வருகிறார். ராஜேந்திரனின் அம்மா பெயரில் சொந்தமாக இப்பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் உறவினர் சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து தனக்கு சொந்தான நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சித்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த ரமேஷ் (48) என்பவர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜேந்திரனை வெட்டினார்.

கைது

இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரனின் மனைவி மகேஸ்வரி லாலாபேட்டை போலீசில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ரமேசை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story