வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

சென்னை கிண்டியை சேர்ந்தவர் லலித் பிரசாத் (வயது 29). இவர் சோளிங்கரை அடுத்த வடகடப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமனுக்கு (40) வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுள்ளார்.

ஆனால் பரசுராமனுக்கு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பி தராமல் இருந்துள்ளார். இது குறித்து கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் லலித் பிரசாத் மீது பரசுராமன் புகார் அளித்தார். அதன்பேரில் கொண்டபாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து லலித் பிரசாத்தை கைது செய்தார்.


Next Story