தூத்துக்குடியில் கஞ்சா கடத்தில் வழக்கில் கைதான13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடியில் கஞ்சா கடத்தில் வழக்கில் கைதான13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தில் வழக்கில் கைதான 13 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய 13 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா வழக்கு

தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே 2 கார்களில் 228 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஞானம் மகன் ஆரோன் (வயது 31), பாரதி நகரை சேர்ந்த அய்யாதுரை மகன் இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சின்னதுரை மகன் மூக்காண்டி என்ற ராஜா (30), மந்திரம் மகன் அருண்குமார் (27), முனியசாமி மகன் காளீஸ்வரன் (24), ஈனமுத்து மகன் விக்னேஷ்வரன் (29), மாரியப்பன் மகன் திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையத்தை சேர்ந்த ஜான் மகன் சஜின் ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (39), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சம்பத்குமார் (50) ஆகிய 13 பேரும் மற்றும் சிலரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆரோன் மதுரை ஜெயிலிலும், மற்றவர்கள் பாளையங்கோட்டை ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் மேற்கண்ட 13 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், மூக்காண்டி என்ற ராஜா, அருண்குமார், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி, சஜின் ரெனி, திருமணிகுமரன், தயாளன், மணிகண்டன், சம்பத்குமார் ஆகிய 13 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவு நகலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் உட்பட 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story