கொலை, கொள்ளை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் பழனிக்குமார் (வயது 39). இவரை சிப்காட் போலீசார் ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர். இதேபோன்று சில்வர்புரத்தை சேர்ந்த திருமணி மகன் மாரிமுத்து (35) என்பவரையும் சிப்காட் போலீசார் மற்றொரு கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் ஆழ்வார்திருநகரி மாதாங் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து என்ற கட்டமாரி (27) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொள்ளை வழக்கில் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பழனிக்குமார், மாரிமுத்து, மாரிமுத்து என்ற கட்டமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 14 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 பேர் உள்பட 268 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.