கொலை, கஞ்சாஎண்ணெய் பதுக்கிய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை, கஞ்சாஎண்ணெய் பதுக்கிய வழக்கில் கைதான  4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொலை, கஞ்சாஎண்ணெய் பதுக்கிய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை மற்றும் கஞ்சா எண்ணெய் பதுக்கிய வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கு

காடல்குடி பூதாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் சுப்பையா (வயது 56). இவரை காடல்குடி போலீசார் ஒரு கொலை வழக்கில் கைது செய்தனர். இதே போன்று திசையன்விளை இட்டமொழி ரோட்டை சேர்ந்த தங்கதுரை மகன் டேனி செல்வன் (20), சாத்தான்குளம் தஞ்சை நகரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் தாவீது (25) ஆகியோரை ஒரு கொலை வழக்கில சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். மேலும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா எண்ணெயை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்ததாக தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த சகாயராஜ் மகன் கிறிஸ்டோபர் (36) உட்பட 4 பேரை தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இதைத் தொடர்ந்து 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சுப்பையா, டேனி செல்வன், தாவீது, கிறிஸ்டோபர் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 209 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story