விபசார வழக்கில் கைதான 2 பேருக்கு 2 ஆண்டு சிறை
விபசார வழக்கில் கைதான 2 பேருக்கு 2 ஆண்டு சிறை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேட்மாநகரை சேர்ந்த நயமோதின் (வயது 49), மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் (46). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் பெண்களை விபசார தொழிலில் ஈடுபடுத்தினர்.
இதுகுறித்து அப்போதைய நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி நயமோதின், அப்துல் கரீம் ஆகியோரை கடந்த 13.3.2020 அன்று கைது செய்தார். பின்னர் அவர்கள் மீது நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி விஜய்ராஜ்குமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கரீம், நயமோதின் ஆகிய 2 பேருக்கும் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஏஞ்சல் செல்வராணி ஆஜரானார்.
இந்த வழக்கில் சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவர்களுக்கு தண்டனை கிடைக்க விரைந்து செயல்பட்ட தற்போதைய நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.