வேலை வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது


வேலை வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கித்தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்தவர் கைது

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் வேலைவாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இந்தியன் ஆயில் நிறுவனம்

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது 40), கார் டிரைவர். இவருக்கு நண்பர்கள் மூலம் சிங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் (56) என்பவர் அறிமுகமானார். இவர் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொதுமேலாளராக பணியாற்றி வருவதாக கூறினார்.

இதையடுத்து கதிரவன், தனது காரை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ஓட்ட அனுமதி அளிக்கும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர் ரூ.2½ லட்சம் செலவாகும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய கதிரவன், ரூ.2½ லட்சத்தை கொடுத்து உள்ளார்.

கைது செய்தனர்

அதற்கு அவர், பத்திரத்தில் ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்துபோட்டு சீல் வைத்து கொடுத்து உள்ளார். ஆனால் அதற்கான ஒப்பந்தத்தை கொடுக்கவில்லை. இது தொடர்பாக பலமுறை கேட்டும் கொடுக்கவில்லை. எனவே தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கதிரவன் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நின்றிருந்த பிரான்சிஸ் சேவியர் செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ரூ.2 கோடி மோசடி

பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் வாடகைக்கு கார் ஒப்பந்தம் செய்வதாக கூறி மட்டுமல்லாமல் வேலை வாங்கித்தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி செய்து உள்ளார்.

அந்த பணத்தில் பல்வேறு பகுதிகளில் லாட்ஜ் எடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து உள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story