கருவில் இருக்கும் பாலினம் கண்டறிந்தால் குண்டர் சட்டத்தில் கைது - மருத்துவ இணை இயக்குநர் எச்சரிக்கை...!


கருவில் இருக்கும் பாலினம் கண்டறிந்தால் குண்டர் சட்டத்தில் கைது - மருத்துவ இணை இயக்குநர் எச்சரிக்கை...!
x

கருவில் இருக்கும் பாலினம் கண்டறிந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடை சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கொ.மாரிமுத்து தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பாலினம் கண்டறிதல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறிந்து சொல்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் கருகலைப்பு செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மீண்டும் குழந்தை பேறு கேள்விக்குறியாகும். சட்ட விரோதமாக கருகலைப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story