இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை


இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை
x
தினத்தந்தி 1 Jun 2022 8:21 AM IST (Updated: 1 Jun 2022 8:38 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைகின்றனா்.

ராமேஸ்வரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் 2 குடும்பங்களை சோ்ந்த 3 போ் அகதிகளாக வந்துள்ளனா்.

இலங்கை கொழும்பைச் சேர்ந்த 3 பேரும் கடல் வழியாக படகு முலம் தனுஷ்கோடிக்கு அடுத்த கோதண்டராமா் கோவில் கடற்கரைக்கு வந்துள்ளனா். அவா்களை கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்கு பின் அவா்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள்.

கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் இதுவரை 83 பேர் ராமேஸ்வரம் முகாமில் அகதிகளாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story