அரிசி கடையில் ரூ.60 ஆயிரம் திருடிய டீ மாஸ்டர் கைது
திருப்பூர்
திருப்பூர் பெருந்தொழுவு சாலை அமராவதி பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 39). அமராவதி பஸ் நிலையம் அருகே அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ந்தேதி இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டிருந்தது. இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச்சேர்ந்த குமார் (20) அரிசி கடை அருகில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்ததும், அவர்தான் அரிசிக்கடை ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பணம், செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து குமாரை நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story