மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; 3 பேர் கைது


மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு; 3 பேர் கைது
x

மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுனை அடுத்த தென்பத்து முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சின்னத்துரை (வயது 38), கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு நெல்லை டவுன் மயில்வண்ணநாதபுரத்தில் உள்ள சுடலை கோவில் கொடை விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் கோவில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பி வந்து போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மேலும் அப்பகுதியில் தேடிய போது மோட்டார் சைக்கிள் தென்பத்து வயல் வெளிப்பகுதியில் மர்மநபர்கள் தீ வைத்து எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து சின்னத்துரை சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து, டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் (24), தென்பத்து முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் (27) மற்றும் முருகன் மகன் ரஞ்சித் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story