மளிகை கடைக்கு தீ வைப்பு


மளிகை கடைக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

மளிகை கடைக்கு தீ வைப்பு

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின் தயாநத் (வயது 45). இவர் ஈத்தவிளை கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் முன்புறம் காய்கறி, விளையாட்டு பொருட்களை வைப்பதற்காக தனியாக இரும்பு வலை கூண்டு ஒன்று அமைக்க வைத்திருந்தார். எட்வின் தயாநத் இரவு கடையை பூட்டிவிட்டு செல்லும்போது, அந்த கூண்டுக்குள் இருக்கும் பொருட்களுடன் அதையும் பூட்டிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை 3 மணிக்கு கடையின் முன்புறமுள்ள கூண்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிவதாக அருகில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். உடனே எட்வின் தயாநத் கடைக்கு ஓடி வந்து பார்த்தார். அப்போது கூண்டுக்குள் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். ஆனாலும், அதில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கொற்றிக்கோடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினரை ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுரை கூறினர்.


Next Story