தொழிலாளி வீட்டுக்கு தீ வைப்பு; வாலிபர் கைது


தொழிலாளி வீட்டுக்கு தீ வைப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துக்குமார் என்ற முத்தையா (வயது 33). தொழிலாளி. இவருக்கும், அதே ஊர் மேலத்தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் இசக்கிபாண்டி (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் வீட்டுக்கு இசக்கிபாண்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த நாற்காலிகள், பிரிட்ஜ், மிக்சி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து முத்துக்குமார் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து, இசக்கிபாண்டியை நேற்று கைது செய்தார்.

1 More update

Next Story