அரசு இசைப்பள்ளியில் கலைப்போட்டிகள்


அரசு இசைப்பள்ளியில் கலைப்போட்டிகள்
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

அரசு இசைப்பள்ளியில் கலைப்போட்டிகள் நடைபெற்றது.

விழுப்புரம்


தஞ்சாவூர் கலை பண்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் ஓவியம், குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் நீலமேகம் தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் ராஜன்பிரகாசம் முன்னிலை வகித்தார். ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் மார்க்கபந்து, குணசேகரன், ஹேமா, மஞ்சம்மாள் உள்ளிட்ட குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். 5 முதல் 8 வயது, 9 முதல் 12 வயது, 13 முதல் 16 வயது என 3 பிரிவுகளில் நடந்த இப்போட்டிககளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.


Next Story