அரசு மகளிர் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி


அரசு மகளிர் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி
x

அரசு மகளிர் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி நடந்தது.

கரூர்

கரூரில் நேற்று பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன. அந்தவகையில் நேற்று கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயராணி தலைமை தாங்கினார். இப்போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ஒரு பிரிவாகவும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கருவி இசை, நடனம், ஓவியப்போட்டி, மொழித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story