அரசு பள்ளியில் கலைத்திருவிழா
அரசு பள்ளியில் கலைத்திருவிழா
கோயம்புத்தூர்
வால்பாறை
பள்ளி கல்வி துறை சார்பில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைத்திருவிழா நேற்று தொடங்கியது. வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்கள். தலைமை ஆசிரியர் சிவன் ராஜ் முன்னிலை வகித்தார். வால்பாறை எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி தொடங்கி வைத்தார். இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தனி நடனம், குழு நடனம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நாட்டுப்புற பாடல், பேச்சு, இசை கருவி வாசித்தல், நாடகம், கதை சொல்லுதல், நகைச்சுவை, திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இன்று(வெள்ளிக்கிழமை) 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது.
Related Tags :
Next Story