அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா
கே.வி.குப்பம் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ராணி தலைமையில் கலைத் திருவிழா நடைபெற்றது. இதில், நாடகம், பேச்சுப்போட்டி, போட்டோகிராபி, கோலாட்டம், பாட்டுப் போட்டி, நடனம், பிறமொழி நாட்டியங்கள், பரதநாட்டியம், மகாபாரத காட்சிகள் நடைபெற்றன. உதவி தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலந்து கொண்டனர்.
பி.கே.புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியை கு.உமாராணி தலைமையில் கலைத் திருவிழா நடைபெற்றது. ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் எஸ்.இளங்கோ நன்றி கூறினார்.
Related Tags :
Next Story