மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கலை திருவிழா


மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில்  அரசு பள்ளிகளில் கலை திருவிழா
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் கலை திருவிழா

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பள்ளி கல்வித்துறை மூலம் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகள் கலை திருவிழா நடத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9, 10 மற்றும் 11, 12 என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் நாடகம், கவிதை, பேச்சு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் செய்து அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதேபோன்று பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

கவின்கலை, நுண் கலை, வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய கலை போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதை தொடர்ந்து மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story