நடுநிலைப்பள்ளியில் கலை திருவிழா


நடுநிலைப்பள்ளியில் கலை திருவிழா
x

நடுநிலைப்பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

குன்றாண்டார்கோவில் ஒன்றியம், ஒடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலை திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மருதமுத்து மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தா வரவேற்றார். விழாவில் மாணவர்களுடைய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சித்தார்த்தன், திலகம், உமா மகேஸ்வரி, செல்வகுமாரி, சரஸ்வதி, யோகலட்சுமி, தங்கபாண்டியன், தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story