புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம், விருந்தினர் ேமடை


புதிதாக அமைக்கப்பட்ட கலையரங்கம், விருந்தினர் ேமடை
x

புதிதாக அமைக்கப்பட்டகலையரங்கம், விருந்தினர் ேமடை திறப்பு விழா நடந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கலையரங்கம் திறக்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அவரது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட குன்றக்குடி ஊராட்சி, சின்னக்குன்றக்குடி கிராமத்தில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் பலவான்குடி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மேடையும் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சிவராமன், வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் ரமேஷ், குன்றக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு மங்கை, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story