கலை இலக்கிய போட்டி
நெல்லையில் கலை இலக்கிய போட்டி நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஏ.நல்லசிவன் நூற்றாண்டு நிறைவு விழா கலை இலக்கிய போட்டிகள் நடந்தது. காப்பீட்டு கழக ஊழியர் சங்க நெல்லை கோட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம், ரங்கோலி மற்றம் கழிவு பொருட்களில் இருந்து கலை பொருட்கள் செய்யும் போட்டி நடந்தது. இதில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story