கிறிஸ்துமஸ் விழாவில் கலை நிகழ்ச்சி


கிறிஸ்துமஸ் விழாவில் கலை நிகழ்ச்சி
x

கிறிஸ்துமஸ் விழாவில் கலை நிகழ்ச்சி

விருதுநகர்


விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமையிலும் பள்ளிச் செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ முன்னிலையிலும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அருப்புக்கோட்டை இம்மானுவேல் தேவாலய போதகர் ஜெய்சன் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியை மெர்சி ரூபி வரவேற்று பேசினார். மாணவ-மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தாத்தா, நர்சரி குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். பள்ளி நிர்வாகத்தினர் கிறிஸ்துமஸ் கேக் வழங்கி மாணவ-மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர் முத்துப்பாண்டி நன்றி தெரிவித்தார்.


Next Story