கோடைகால கலை பயிற்சி முகாம்
நாமக்கல்லில் கோடைகால கலை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல்
தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் குழந்தைகள் இடையே மறைந்து கிடக்கும், ஆக்கபூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, நுண்கலை திறமைகளை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம் நாமக்கல் கோட்டை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் யோகா, கராத்தே, சிலம்பம், பரத நாட்டியம், ஓவியம், தப்பு, கரகம், காவடி போன்ற கிராமிய நடனம், கைவினை பொருட்கள் தயாரிப்பு கலை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story