கலைஞா் நூற்றாண்டு விழா:அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்
கலைஞா் நூற்றாண்டு விழா:அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்
நீலகிரி
பந்தலூர்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பந்தலூர் அருகே பெண்ணை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஷெரின், நஸ்ரின், மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story