கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி
ஓச்சேரி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டியை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.
ராணிப்பேட்டை
ஓச்சேரியை அடுத்த பெரும்புலிப்பாக்கம் பகுதியில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் துரை மஸ்தான், மாவட்ட பிரதிநிதி ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் பேரூர் செயலாளர் பாஸ் நரசிம்மன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story