கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்
கலைஞர் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்
திருப்புவனம்
திருப்புவனம் சந்தை திடலில் மேற்கு ஒன்றிய. நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு தின விழா பட்டிமன்றம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, திருப்புவனம் யூனியன் தலைவர் சின்னையா, நகர் செயலாளர் நாகூர்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் வரவேற்றார் பட்டிமன்றத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இனிய தலைவர் கலைஞரை மீண்டும் மீண்டும் பேச காரணம் இனத்தின் மீட்சியே, மொழியின் மாட்சியே என்ற தலைப்புகளில் நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இனத்தின் மீட்சியே என்ற தலைப்பில் பேராசிரியர் மானசீகன், கவிஞர் பிரபாகரன் ஆகியோரும், மொழியின் மாட்சியே என்ற தலைப்பில் பேராசிரியர்கள் அன்பு, மலர்விழி ஆகியோர் பேசினர். பட்டிமன்ற நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன், மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து, இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், துணை அமைப்பாளர்கள் பொற்கோ, முகமதுமகாதீர், மகளிரணி அமைப்பாளர் பவானிகணேசன், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சுப்பையா, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் கோபால், மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வி ரவி, ராமலெட்சுமிபாலகிருஷ்ணன், மாரிதாசன், பத்மாவதி முத்துக்குமார், சித்ராதேவி ஆறுமுகம், வேல்பாண்டி, ஜனதா செல்வபிரகாஷ், கண்ணன், பாலகிருஷ்ணன், கமிதாபானு ஷேக்முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய நிர்வாகி சேகர் நன்றி கூறினார்.