கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்விண்ணப்பங்கள் பதிவு முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை அமைச்சர் பொன்முடி திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம், தகுதியானவர்கள் விடுபடாதபடி பார்த்துக் கொண்டு, முறையாக பதிவு செய்யுமாறு அறிவுரை கூறினார். மேலும், விண்ணப்ப பதிவுக்காக வந்திருந்த பெண்களிடம் குறைகளையும், அமைச்சர் பொன்முடி கேட்டறிந்தார். அப்போது அவருடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரபு, ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என். முருகன், முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமிஉமேஸ்வரன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகம், நாராயணசாமி, அரகண்டநல்லூர் தொழிலதிபர் எம்.எஸ். கே.அக்பர், நகர தி.மு.க. செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, தி.மு.க. நிர்வாகி வெங்கட், ஒன்றிய அவை தலைவர் சக்திசிவம், நிர்வாகிகள் ஜெய்சங்கர், பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.