கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வீடு, வீடாக வினியோகம்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வீடு, வீடாக வினியோகம்
x

வாணியம்பாடி அருகே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் வீடு, வீடாக வினியோகத்தை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் அதனை சமர்ப்பிக்க வேண்டிய தேதி குறிப்பிட்ட டோக்கன் வீடு வீடாக வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. ஆலங்காயம் ஒன்றியம், மதனஞ்சேரி ஊராட்சியில் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகளை ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். மேலும் வருவாய்த்துறையினருடன் இணைந்து வீடு வீடாக வழங்கினார்.

அப்போது ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதாபாரி, மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூபாலன், பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story