கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் பார்வையிட்டார்


கலைஞர் மகளிர் உரிமை திட்டம்: விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி - கலெக்டர் பார்வையிட்டார்
x

கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்ற தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை செல்போன் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக 1086 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வட்ட வாரியாக பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி வட்ட வாரியாக வருவாய் கோட்ட அலுவலர்கள், மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள், தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் ஆகியோரால் காஞ்சீபுரம் வட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் 306 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சியை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் செயல்முறையை கேட்டறிந்தார்.

முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களுடன் கொண்டு வர வேண்டிய ஆவணங்களான ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது, போன்றவற்றை அசலாக சரிபார்த்து விண்ணப்பங்களை செல்போன் செயலி வழியாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார்.

தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முகாம் இடத்திற்கு ஒரு நாள் முன்னதாக சென்று அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உடனிருந்தார்.

உத்திரமேரூர் அடுத்த கல்லூரி வளாகத்தில் கலைஞரின் மகளிர் உரிமை தொகை விண்ணப்பிக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உத்திரமேரூர் தாசில்தார் ஞானவேல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், முதல்வர் பிருந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

பயிற்சியில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் வழிமுறைகள் தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யும் வழிமுறைகள் ஒவ்வொரு பயனாளிகளிடமும் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கும் செயலி அதன் வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.


Next Story