அரசு மகளிர் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா


அரசு மகளிர் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா
x

அரசு மகளிர் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமையாசிரியை முல்லைக்கொடி தலைமை தாங்கினார். இதில் பள்ளி அளவில் கட்டுரை, ஓவியம், கவிதை, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைத்த சிம்மவாகினியை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார். விழாவில் உடையார்பாளையம் பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.


Next Story