மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி


மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
x

மோகனூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கியக் கல்வித் திட்டத்தின் கீழ் மோகனூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் தொடங்கி வைத்தார். வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் பாலுசாமி முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு பாடுதல், நடனம், நாடகம், கர்ம வீரர் காமராஜர் பற்றி பேசுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மோகனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீனாம்பாள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார். ஆசிரிய பயிற்றுநர்கள் தமிழரசி, ராதிகா, விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு பயிற்றுநர்கள் ஆனந்தகுமார், மீனா செல்வராணி, உமா தேவி, செந்தமிழ்செல்வி ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுக்கான பயிற்சியை அளித்தனர். இதில் சுப்ரமணியபுரம் பள்ளி பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் விஜய்ஆனந்த், பள்ளி ஆயத்த முகாம் பணியாளர்கள் உஷாராணி, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story