ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில்ஆனி உத்திரப்பெருவிழா
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திரப்பெருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஆறுமுகநேரி:
திருவாடுதுறை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஆணி உத்திர பெருந்திருவிழா வரும் 16-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு திருவிழா முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இதனை ஒட்டி காலையில் கன்னி விநாயகருக்கு அபிஷேகம், அலங்கார திபாராதனையும், தொடர்ந்து கோவில் வழிபாட்டு மகளிர் குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, கோவில் உள் பிரகாரத்தில் சுற்றி வந்து கோவில் முன்பு நடப்பட்டது. பின்னர் முகூர்த்த காலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் பக்த ஜன சபை செயலாளர் எஸ். ஹரிகிருஷ்ணன், ஆறுமுகநேரி நல மன்ற தலைவர் பி. பூபால ராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் அசோக்குமார், ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி சுப்பையா, இளையபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வரும் 16-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆணி உத்திர திருவிழா தொடங்குகிறது. அன்று காலை, மாலையில் அம்பாள்- சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை கோவில் மணியம் மற்றும் பக்த சபையினர் மண்டக படிகாரர்கள் செய்து வருகின்றனர்.