ஆறுமுகநேரியில்இந்து முன்னணி கூட்டம்


ஆறுமுகநேரியில்இந்து முன்னணி கூட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் இந்து முன்னணி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நகர இந்து முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கசமுத்து முன்னிலை முன்னிலை வகித்தார். வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் ஆறுமுகநேரி நகர தலைவராக சி. வெங்கடேசன், பொதுச் செயலாளராக பழனி ராஜன், பொருளாளராக விஜயபாஸ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக சுரேஷ் கண்ணன், செல்வ குரு, ஆனந்த குமார், பாரதி ராஜா ஆகியோரும் செயலாளர்களாக மணிகண்டன், தியாகராஜன், பழனி, பரத் கண்ணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இக்கூட்டத்தில், ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும், திருச்செந்தூருக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சாலையோர நடைபாதை சேதமடைந்து கிடப்பதை நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story