ஆறுமுகநேரி கிழக்கத்தி முத்துசுவாமி கோவில் கும்பாபிஷேகம்


ஆறுமுகநேரி கிழக்கத்தி முத்துசுவாமி கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

ஆறுமுகநேரி கிழக்கத்தி முத்துசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காந்தி தெரு கிழக்கத்திமுத்து சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், லெட்சுமி பூஜை, தீபாரதனை, கோ பூஜை நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் நடந்தது. இரவில் கிழக்கத்திமுத்து சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு யாகசாலை பிரவேசம், 1-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாரதனை, யந்திர ஸ்தாபனம் முதலியன நடந்தது. நேற்று அதிகாலை 1.30 மணிக்கு 2-ம்கால யாகசாலை பூஜை, கும்ப பூஜை, தீபாரதனையை தொடர்ந்து கடம் புறப்பட்டது. காலை 6 மணி முதல் காலை 7 மணிக்குள் விமான கலசம், கிழக்கத்தி முத்து சுவாமி, பேச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், நண்பகலில் சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


Next Story