ஆறுமுகநேரி பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


ஆறுமுகநேரி பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:06 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி பத்திரகாளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலையில் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் கோவிலின் முகப்பு மண்டபம் திறப்பு விழா நடந்தது. மாலையில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார்.

பின்னர் பெண்கள் திரளாக பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தன. இரண்டாம் நாள் காலை, மாலையில் சிறப்பு பூஜையும் வில்லிசையும் நடைபெற்றது. இரவு அம்மனுக்கு மாகாப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மூன்றாம் நாளன்று மதியம் உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடந்தன. இரவில் பிரம்மசக்தி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கும்மி அடித்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு நள்ளிரவு பூஜையில் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலையில் தீர்த்தவாரி அபிஷேகம் நடந்தது.

1 More update

Next Story